மிக மிக சிறந்த பரிகாரங்கள்

 


சூரியன் பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலம் இல்லை என்றால்

1.    தினசரி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

2.   நேரம் கிடைக்கும் போதெல்லாம் காயத்ரி மந்திரம் படியுங்கள்

3.   சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை சாப்பிடுங்கள்.

4.    சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.

5.    சூரியன்  அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வரும் வருவாயைத் தவிருங்கள்.

6.   சூரியனுக்கு உரிய தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு மாறி விடுங்கள். (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு மாறி விடுங்கள்)

7.   வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.


சந்திரன் பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லை என்றால்

1.    அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (நிலாச்சோறு).

2.    ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3.    சந்திரன் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.

4.    உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5.    ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.

6.    அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7.    சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8.    வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9.    கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், அதிகம் தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.


செவ்வாய் பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லை என்றால்

1.    ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?

2.    நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

3.    பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

4.    உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.

5.    உங்கள் வீடு () வியாபார ஸ்தலத்தில் தெற்கு () தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.

6.    மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.

7.    தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

8.    செவ்வாய் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

புதன் பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் புதன் பலம் இல்லை என்றால்

1.    உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம் தான்.

2.    யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.

3.    வியாபாரம் வேண்டாம். 

4.    கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் () போனில் தெரிவியுங்கள்.

5.    க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.

6.    தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.

7.    ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகியிருங்கள்.

8.    கள்ள உறவு உதவாது.

9.    தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 

10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.

சுக்கிரன் பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இல்லை என்றால்

1.    திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளுங்கள் . 

2.    திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றுங்கள்.

3.    ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

4.    முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.

5.    சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.

6.    ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.

7.    உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).

8.     ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 

9.    வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.

10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

குரு பரிகாரங்கள் 

 உங்கள் ஜாதகத்தில் குரு பலம் இல்லை என்றால்

1.    வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து  குருவுக்கு  விரதமிருங்கள்.

2.    தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 

3.    வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.

4.    அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

5.    பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.

6.    மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.

7.    கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள்.

8.    ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.

9.    பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.

10. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

11. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.

12. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

சனி பரிகாரங்கள்

 உங்கள் ஜாதகத்தில் சனி பலம் இல்லை என்றால்

1.    சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.

2.    கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.

3.    ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.

4.    சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.

5.    வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.

6.    சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.

7.    குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

அலங்கரிக்காதீர்கள். 

8.    தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.

9.    சனிக்கு ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.

10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.

11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.

12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.

13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.


எதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. 

எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

Comments

  1. ஜாதகத்தில் ஒரு கிரகம் பலம் இல்லை என்று எவ்வாறு அறிவது ஐயா

    ReplyDelete
    Replies
    1. கிரகம் நீசம் அடைந்து இருப்பது, சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்து இருப்பது, பகைக்கிரகத்தோடு சேர்ந்து இருப்பது சட்பலத்தில் குறைவான மதிப்பெண் பெறுவது இப்படி பல காரணம் உள்ளது.

      Delete
    2. Sir ஒரு கிரகம் கேதுவுடன் சேர்ந்தாலும் பலம் குறையுமா?

      Delete
  2. அருமையான மற்றும் அற்புதமான தகவல்கள் வழங்கியதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  3. mudakku rasikku parigara kovil irunthal kodungal

    ReplyDelete

Post a Comment