அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!
விருச்சிகம்
விருச்சிக ராசியின்
எண்ண அதிபதி குரு. ராசி மீனம். குரு தர்ம சிந்தனையுடைய
கிரகம். அச்சிறப்புள்ள கிரகமே விருச்சிகத்துக்கு லட்சிய அதிபதியாக
வந்திருப்பது வரமே.
சரி; இவர்களின் இந்த தர்மமிகு சிந்தனையை நிறைவேற்றுபவர் கன்னி புதன்.
விருச்சிகத்தாரின்
எண்ணங்களை நிறைவேற்றும் புதன், கன்னி ராசியில் ஆட்சியும், உச்சமும்
பெறுவார். ஆஹா! இவ்விதம் அமைந்துவிட்டால்,
நீங்கள் என்ன எண்ணினாலும் உடனே நிறைவேறும். சந்தேகமில்லை.
அனேகமாக விருச்சிக
ராசியினருக்கு, அவர்கள் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும்- அவர்கள் சொல்லுக்கு
மதிப்பு வேண்டும்- நல்ல வீடு அமையவேண்டும்- நல்ல காசுபணப் புழக்கம் வேண்டும்- நிறைய அசையும் சொத்து
வேண்டும்- குடும்பத்திலுள்ள எல்லாரும் இவரை அண்டிப் பிழைக்க வேண்டும்
என இவ்வாறெல்லாம் லட்சியங்கள் சிறகடிக்கும்.
புதன் உச்சமாகும்போது
இவையனைத்தும் செவ்வனே பலிதமாகும்.
இதே புதன் நீசமானால்
அந்தோ பரிதாபம். எண்ணத்தை நிறைவேற்றும் கிரகம் எண்ணங்கள் உண்டாகுமிடத்தில் போய் நீசமாகிவிடும்.
என்ன சொல்ல? இதில் விஷயம் என்னவென்றால்,
இவர்கள் உருப்படாத விஷயங்களை எண்ணுவார்கள். அதுவும்
பலிக்காது. இதுபோன்று புதன் நீசமான விருச்சிகத்தாரை நாளடைவில்
சுற்றியுள்ளவர்கள், 'இவன் மண்டையில் தினுசு தினுசாக விளங்காத
யோசனை வருது பாரு!' என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
மிதுனத்தில் புதன்
ஆட்சியாகி அமர்ந்தாலும் அதுவும் ஒன்றும் விசேஷமில்லை.
புதன் நீசமான விருச்சிகத்தார், புதன்கிழமை, நவகிரகங்களில் புதன் பகவானை வணங்கவேண்டும்.
படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள். ஆன்மிகப் புத்தகங்களை விநியோகம் செய்யலாம்.
நிறைய மரங்கள், செடிகள் வளர உதவுங்கள். பச்சை நிற இலை துளிர் விடும்போது
புதன் சம்பந்தமான கோளாறுகள் விலகும்.
புதன் நீசம் பெற்ற
விருச்சிகத்தார் திருவெண்காடு, மதுரை போன்ற தலங்களுக்குச் சென்று சேவிக்கவும்.
ஆர்.. மகாலட்சுமி
விருச்சிக ராசியின் எண்ண அதிபதி குரு.சிந்தனையை நிறைவேற்றுபவர்
ReplyDeleteஇதே போல மற்ற ராசிகளுக்கும் பதிவு போடுங்கள்