மேஷ லக்னம்
ஏழாம் பாவகப்பலன்கள்
ஏழாம் பாவகப்பலன்கள்
- இவர்களுக்கு வர கூடிய கணவன் மனைவி பொருத்தம் இல்லாத ஜோடியாக இருப்பார்கள்.
- எதிர்பாலினரது நட்பு கொண்டவராக இருப்பார், திருமணத்திற்குப்பின் உயர்வு ஏற்படும்.
- திருமண மணவாழ்வில் பரிபூர்ண திருப்தி இல்லாமல் இருப்பார்கள்.
- மனைவி பொறுமை இல்லாதவராகவும், சஞ்சலமனம் உடையவராகவும் இருப்பார்.
- கணவன் மனைவி உறவில் பிரிவு இருக்கும் ஒற்றுமையாக இருந்தால் இருவருக்கும் ஆரோக்கியக்குறைவு ஏற்படும்.
- மனைவிக்கு படித்தவராகவும் அதில் தடைகள் உடையவராகவும் இருப்பார்.
- மனைவியால் ஆதாயம் ஏற்படும், தொழிலுக்கு மனைவி சப்போட் செய்வார்.
- யூரின் பிரச்சினைகள் இருக்கும், மனைவிக்கு பல் சார்ந்த பிரச்சினை இருக்கும்.
- தாய்வழிப்பாட்டி ஆதரவு உண்டு.
- 2 வது குழந்தை வசீகரமாகவும் ஆயுள் பிரச்சினை அல்லது திருமண வாழ்வில் பிரச்சினை கொண்டதாகவும் இருக்கும்.
- மேச லக்னத்திற்கு வாடிக்கையாளர் நன்றாக வருவார்கள்.
மேஷ லக்னம்
எட்டாம் பாவகப்பலன்கள்
- அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும்,
- நீண்ட ஆயுள்
உடையவராக இருப்பார்கள்.
- வாழ்க்கை ஒரு
சீராக இல்லாமல் கரடு முரடான வாழ்க்கையாக இருக்கும்.
- பலர்
ஜோதிடராகவும் மருத்துவராகவும் இருப்பார்கள், அல்லது குவாரி, மணல், செங்கல், ரைஸ்மில், தியேட்டர்
தொடர்பானவற்றில் வருமானம் இருக்கும்.
- 8 ஆம் நம்பர்
வீட்டில் இருப்பார்கள் அல்லது வாங்குவார்கள்.
- கழிவறையில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்,
- மர்ம உறுப்பு, ஆசனவாய்
வெடிப்பு, மலச்சிக்கல் ஏற்படும்.
- இவர் பிறர்க்கு உயில் எழுதி வைப்பார்,
- குழந்தைகளால் அவமானம் இருக்கும்,
- குழந்தைகள் கல்வியில் சிறந்து
விளங்குவார்கள்.
- உயில் சொத்து இருக்கும்,
- திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
- ஜாதகர் குழந்தைக்கு சொத்துக்களை கொடுப்பார்.
மேஷ லக்னம்
ஒன்பதாம் பாவகப்பலன்கள்
ஒன்பதாம் பாவகப்பலன்கள்
- மேச லக்ன ஜாதகர் பக்திமான், பய பக்தியோடு இருப்பார்.
- தீர்த்த யாத்திரைகள் சென்று வரக்கூடியவராக இருப்பார்.
- காசி யாத்திரை சென்று வந்த பின் ஞானம் சித்திக்கும்.
- தந்தையிடம் ஒற்றுமை குறைவாக இருக்கும்.
- தந்தைக்கு தொழில் நஷ்டம் ஏற்படும்.
- தகப்பனாருக்கு வருமானம் குறைவாக இருக்கும்,
- தந்தைக்கு சொத்து அமைய தடை இருக்கும்.
- தந்தை சகோதர, சகோதரிகளால் ஏமாற்றம் அடைந்தவர்.
- தந்தை சகோதர சகோதரிகளுக்கு விட்டுக் கொடுப்பார்.
- தந்தை வழியில் காணாமல் போனவர் மணவாழ்வு அமைதியில்லாதவர் திருப்தியில்லாதவர் இருப்பர்.
- தந்தைக்கும் மணவாழ்வில் திருப்தி இருக்காது.
- ஆன்மீகம் சார்ந்த பொருள் விற்பனையில் மாட்டி நஷ்டம் அடைவார்.
- ஜாதகரின் உயர்வைக் காண ஜாதகரின் தந்தை இருக்க மாட்டார்.
மேஷ லக்னம்
பத்தாம் பாவகப்பலன்கள்
பத்தாம் பாவகப்பலன்கள்
- சங்கப் பொறுப்பில் இருப்பார், அன்னதானம் செய்வார்.
- கர்மக்காரியங்களுக்கு உதவுவார்.
- வம்பு வழக்குகளைத் தானே தேடிக் கொள்வார்.
- போதை வஸ்துக்களைப் பழகினால் மீளமுடியாது.
- தொழிலில் சுறுசுறுப்புடன் செயல்படுவார்.
- சமயோசித புத்தியால் தொழிலை திறம்பட நடத்துவார்.
- தொழிலில் பிறரின் குறுக்கீடு இவருக்கு பிடிக்காது.
- பெரிய அளவில் எந்திரத்தொழில் ஆகாது.
- தொழில் விஷயத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை இவரால் கொடுக்க முடியாது.
- ஆட்கள் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
- அதிக உற்பத்தி செய்வார் ஆனால் விற்பனை ஆகாது.
- விவசாயம் எந்திரம் சார்ந்த அனைத்துத்துறையிலும் ஈடுபாடு இருக்கும், அதனால் நன்மையும் ஏற்படும்.
- தொழில் சார்ந்த அடைமொழிப் பெயர் இருக்கும்.
- சுக்கிரனும் செவ்வாயும் கெட்டிருந்தால் பெண்கள் தொடர்பால் அவமானப்படுவார்.
- மாமியார்க்கு சொத்து இருக்கும்.
- மாமியார் அவர்கள் வீட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
மேஷ லக்னம்
பதினொன்றாம் பாவகப்பலன்கள்
- இவருடைய அதிக ஆசையே இவருக்கு பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
- மூத்த சகோதரத்தால் லாபமும் உண்டு பிரச்சினையும் உண்டு.
- மூத்த சகோதரர் இருந்தால் அவரின் திருமணத்தை இவரே நடத்தி வைப்பார், கடைசியில் அவரிடம் விரோதம் ஏற்படும்.
- சிலருக்கு தவறான உறவுகளால் பாதிப்பு வரும்.
- வீட்டு வேலைக்குப் பெண்களை அமர்த்திக் கூடாது.
- வேலைக்காரப் பெண்கள் மேல் ஆர்வம் இருக்கும்.
- ஏணி, மாடிப்படிக்கட்டில் தவறி விழ வாய்ப்புண்டு.
- நண்பர்களால் அவமானம் ஏற்படும்.
மேஷ லக்னம்
பன்னிரண்டாம் பாவகப்பலன்கள்
- புதியதாக எதையும் உருவாக்குவார்,
- சேமிப்பு இருக்கும், விரையங்களும் அதிகம் இருக்கும்.
- வெளியூர் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
- இரண்டாவது தொழில் செய்வார்கள்.
- தூக்கம் வராமல் தவிப்பார்கள்.
- காலில் அடிபடுதல், கால் வலி ஏற்படும்.
- நிலையான போகம் இருக்காது.
- காணாமல் போய் திரும்பி வந்திருப்பார்.
- குழந்தைகளுக்கு விட்டுக் கொடுப்பார்.
மேஷ லக்னம் பலன்கள் நிறைவு பெறுகிறது.
Comments
Post a Comment