மிதுன லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள்

 


மிதுன லக்னம் 
பாவகப்பலன்கள்
  • சுறு சுறுப்பானவர், மத்திமமான உயரம் உடையவர்.
  • காந்தப் பார்வை உடையவர், தோள் வலிமையாக இருக்கும் .
  • மாநிறம்  அல்லது  கருப்பு  நிறமாக  இருப்பார்.
  • கண் கண்டதை  கை செய்யும் திறமை இருக்கும்.
  • முதலில் வேலைக்குப்  போகத்தான்  ஆர்வம்  இருக்கும்.
  • சுய நலம் அதிகம்  இருக்கும்
  • கபடப் பேர் வழி, பிறரை  நம்ப  மாட்டார், சந்தேகப் பேர் வழி
  • பயந்த சுபாவம் உடையவர், கோபம்  வந்தும்  சிரித்துக் கொண்டே  பேசுவார்.
  • பிறர்  அபிப்ராயத்தைக் கேட்டுக்கொள்வார்  தன்  அபிப்ராயத்தை  வெளியே  சொல்லமாட்டார்.
  • எதையும்  சீக்கிரத்தில்  கிரகித்துக்  கொள்வார்.
  • நயமாக  சிரித்துப்பேசி  காரியம்  சாதிப்பார்.
  • அடுத்தவர்  உழைப்பை  இவர்  பயன்படுத்திக்  கொள்வார்.
  • எதிரியின்  துயரம்  கண்டு  மகிழ்ச்சி  அடையும்  குணம்  இருக்கும்.

மிதுன லக்னம்
 இரண்டாம் பாவகப்பலன்கள்
  • தந்திரமாகப் பேசுவார், பிறரை ஏளனம், நையாண்டி செய்வதில் சமர்த்தர்.
  • பிறர்  ரசிக்குமாறு  பேசக்கூடியவர், ஆனால் இதை விரும்பாதது போல் நடிப்பார்.
  • பேச்சரங்கம், பட்டிமன்றம்  போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.
  • இவரைப்பற்றி குறை கூறினாலும் முகம் கோணுவார், அவரை விட்டு விலகுவார்.
  • சிறுவயதிலேயே சம்பாதிப்பார் குடும்பபொறுப்பும் இவருக்கு வரும்.
  • சகோதர,சகோதரிக்கு கல்வி , சுபகாரியங்கள் செய்வது இவர் பொறுப்பில் வரும்.
  • திருமணத்திற்குப் பின்னரும் இந்த பொறுப்பு தொடரும், விலக இயலாது.
  • பிறைச் சந்திரன் வளர்ந்து தேய்வது போல் வருமானம் ஒரே சீராக இருக்காது.
  • குடும்ப நிலையும் பொறுப்பும் வளர்ந்தும் வளர்ச்சி அடையாமலும் இருக்கும்.
  • இவர் கையில் எப்போதும் பணம் இருக்கும்.
  • கடன் வாங்கியாவது பணத்தை கையில் வைத்திருப்பார்.
  • ஆடம்பரத்திற்கு செலவு செய்வார்.
  • பண விவகாரங்களில்  விரோதங்கள் ஏற்பட்டபோதும் கவலை கொள்ள மாட்டார்.

மிதுன லக்னம்
 மூன்றாம் பாவகப்பலன்கள்
  • கற்பனை திறன் அதிகம் உள்ளவர்.
  • சகோதரம் இருப்பார்கள் , அவர்களிடம் பிரச்சினை இருக்கும்.
  • ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் சகோதர ஆதரவும் பின்னர் பயங்கரப் பகையும் இருக்கும்.
  • இளைய சகோதரரால் ஏமாற்றப்படுவார், கம்யூனிகேசன் சிறப்பாக இருக்கும்.
  • இவர்கள் பெரும்பாலும் போன் வந்தால் எடுக்கமாட்டார்கள்.
  • ENT Problem இருக்கும்.
  • மாமனார் வசதியானவர் அரசு தொடர்புள்ளவராக இருப்பார்.
  • மாமனாரால் ஆதரவு குறைவாகவே இருக்கும்.
  • ஒரு நாளாவது மாமனாரால் அவமானப்படுத்தப்படுவார்.
  • சீட்டு MLM ஈடுபாடு இருக்கும் அதனால் நஷ்டம் அடைவார்.
  • அதிக வட்டி கொடுத்து அல்லது , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு துன்பப்படுவார்.
  • ஜாமீன் பிரச்சினை, பத்திரப்பிரச்சனை,  செல்போனால் பிரச்சினை ஏற்படும்.
  • டூ விலர் சாவியை  தொலைப்பார்.
  • கமிஷன் காண்டிராக்ட் லாபம் குறைவு. 

மிதுன லக்னம்
 நான்காம் பாவகப்பலன்கள்
  • தாய் மீது  பற்று இருந்தாலும்  அதில் திருப்தி இருக்காது.
  • தாய் இவரை விட அறிவாளியாக இருப்பார்.
  • கல்வியில் தடை இருக்கும், ஆனாலும் படிக்காத மேதை.
  • ஏதேனும் ஒரு கல்வியில் சிறப்பு பெறுவார்.
  • விலை உயர்ந்த பொருட்களை விரும்புவார்.
  • ஆடம்பரத்தை விரும்பி அனுபவிப்பார்.
  • சிற்றின்ப பிரியர்.
  • வீடு வாகன வசதி நல்லபடி அமையும்.
  • எவ்வளவு கொடுத்தாலும் கிடைத்தாலும் திருப்தி என்பது இருக்காது.

மிதுன லக்னம்
 ஐந்தாம் பாவகப்பலன்கள்
  • திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
  • கருக்கலைப்பு செய்வார்கள் அல்லது ஒரு கருகலையும்.
  • குழந்தைக்கு ஒரு துன்பம் ஏற்படும்.
  • குலதெய்வம் இடம் மாறி வந்திருக்கும்.
  • குலதெய்வத்தில் ஒரு வாகனம் இருக்கும்.
  • குலதெய்வ வழிபாட்டில் ஒரு திருப்தி இருக்காது.
  • குழந்தை வெளியூர்,  வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும்.
  • குழந்தைக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.
  • ஒரே நேரத்தில் இரண்டு காதல் செய்வார்கள்.
  • குழந்தையும்  காதலிக்கும்.
  • வயதான காலத்தில் புத்திரர்களால் துன்பம் கவலை மனவேற்றுமை பிரிவு ஏற்படும்.
  • தாத்தா இடம் மாறி வந்தவர் / காணாமல் போய் வந்தவர்.
  • சிறந்த நடிகர் தாத்தா வழியில் இருந்து இருப்பார்கள்
  • இரு திருமணம் / காதல் திருமணம் செய்தவர்கள் இருப்பார்கள்.
  • வெளியூர் சென்று வருமானம் ஈட்டக் கூடியவர்.  

மிதுன லக்னம்
 ஆறாம் பாவகப்பலன்கள்
  • விபத்து ரத்தம் தொடர்பான பாதிப்பு ஏற்படும்
  • சிறு அறுவை சிகிச்சை  நடக்கும்.
  • குடல் சார்ந்த அறுவை சிகிச்சை நடக்கும்.
  • நகையை அடகு வைத்து கடன் வாங்குவார்.
  • விவசாயக்கடன் வீட்டின் மீது  கடன் இருக்கும்.
  • கடன் வாங்குவார் அதனால் அவமானம் ஏற்படும்.
  • சகோதர சகோதரிக்கு கடன் வாங்கி கொடுப்பதால்  அவமானம்  ஏற்படும்.
  • ஒரு நாளாவது போலீஸ் ஸ்டேஷன் போவார்.
  • இவர்களுக்கு எதிரிகள் கண்டிப்பாக இருப்பார்கள்..
  • மாமனார்க்கு சொத்து இருக்கும்.
  • உத்தியோகம் செய்வார்.
  • உத்தியோகத்தால் லாபம் இருக்கும்.
  • மருத்துவம் சார்ந்த நபர் , ஜோதிடர், 
  • சீருடைப்பணியாளர் இவர்களில் யாரேனும் குடும்பத்தில் இருப்பார்கள்.
  • காரசாரமான உணவை விரும்புவார்.
  • அசைவ உணவை விரும்பி சாப்பிடுவார். 

மிதுன லக்ன பலன்கள் தொடரும் .........

Comments