கடக லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள்

 

 

கடக லக்னம் 
பாவகப்பலன்கள்

  • அழகானவர்,  உணர்ச்சி வசப்படக் கூடியவர்.
  • இளமையில் ஒல்லியாய் இருந்து  மத்திம வயதில் பருமன் ஆவார்.
  • வசீகரமான கண்கள் , 
  • அழகான கன்னம் உடையவர்.
  • சிறிய கழுத்து அகன்ற மார்பு, 
  • குறுகுறுப்பான பார்வை உடையவர்.
  • வேகமான நடப்பார், விடா முயற்சி செய்பவர்.
  • முதலில் எவரையும் சந்தேகிப்பார் பழகிய பின் தன் உள்ளத்தைப் பறி கொடுப்பார்.
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் தன் பணிகளை எவ்வளவு சிரமப்பட்டாலும் முடித்திடுவார்.
  • உயர்ந்த லட்சியங்கள் திட்டங்கள் உடையவர், 
  • எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்.
  • எதையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பார்.
  • முடிவு செய்து விட்டால் எதிர்ப்புகள் வந்தாலும், 
  • நினைத்ததை முடிக்கும் வரை ஓயமாட்டார்.
  • எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவு உடையவர்.
  • ஞாபக சக்தி அதிகம் இருக்கும், கோழித்தூக்கம் தூங்குபவர்.
  • எதையும் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கும்.
  • வேலையாட்களிடம் அபார நம்பிக்கை வைப்பார், 
  • அவர்களுக்காக எதையும் தியாகம் செய்வார். 


கடக லக்னம் 
இரண்டாம் பாவகப்பலன்கள்

  • கொடுத்த வாக்கு தவறமாட்டார்.
  • இவரிடம் பிறரும் வாக்கு தவற கூடாது என்று நினைப்பார்.
  • மணிக்கணக்கிலும் பேசுவதில் வல்லவராக இருப்பார்.
  • சில சமயத்தில் முன் கோபம் இருக்கும்.
  • குடும்ப பொறுப்பு, மிகுந்த அக்கறை உடையவர்.
  • இவர் பிறந்த பின் குடும்பம் வளர்ச்சி அடையும். 
  • திருமண விஷயங்களில் இவர் அதிகம் செலவு செய்யவேண்டி வரும்.
  • யாரிடமேனும் பணம் கொடுத்தால் திரும்ப வராது.
  • கண் பிரச்சனை ஏற்படும், 
  • கண்ணாடி அணியாத கடகம் இல்லை.


கடக லக்னம் 
மூன்றாம்  பாவகப்பலன்கள்

  • சகோதரி உறவு கடகத்திற்கு  ஒத்து வராது.
  • இளைய சகோதரத்தால் தொடர்ந்து செலவுகள் ஏற்படும்.
  • பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம் இருக்கும்.
  • பிறருக்கான வேலையை கண்ணும் கருத்துமாய், 
  • தன் வேலைகள் போல் செய்து முடிப்பார்.
  • திருமணமான 3 வருடம் அல்லது 12 வருடத்தில் மாமானருக்குக் கண்டம் இருக்கும்.
  • கமிஷன், காண்டிராக்ட் லாபம் தரும்.
  • சீட்டு, MLM முதலியவற்றில் நஷ்டம் ஏற்படும்.
  • ENT தொண்டைப் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
  • சிறுவயதிலேயே டூ வீலர் யோகம் ஏற்படும்.
  • பக்கத்து வீட்டுகாரரிடம் எல்லைப் பிரச்சனை வரும்.
  • பத்திரப்பதிவு  பிரச்சனை வரும்.
  • சகோதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்.


கடக லக்னம்  
நான்காம் பாவகப்பலன்கள்

  • கடகத்திற்கு தாயன்பு அதிகம்.
  • தந்தையிடம் கருத்து வேறுபாடு பிரிவு  இருக்கும்.
  • சுயநலம், அவசர புத்தி கொண்டவர் .
  • நேரத்தை வீணாக கழிக்க மாட்டார்.
  • ஆடம்பர பிரியர், வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்வார்.
  • கல்விப் பயிற்சிக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.
  • கல்வியில் தடை இருக்கும்.
  • சிறுவயதிலேயே வீடு, வாகனம், மனை அமைத்துக் கொள்ள ஆர்வம் இருக்கும், அமையும்.
  • சங்கம், அரசு சார்ந்த பதவி கிடைக்கும் .
  • பூர்வ புண்ணியத்தினால் பதவி கிடைக்கும்.


கடக லக்னம் 
ஐந்தாம் பாவகப்பலன்கள்

  • யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தொழிலில் புகழ் அடைவார்.
  • நிலம், வீடு  இவற்றால் லாபம் கிடைக்கும்.
  • கருக்கலைப்பு இருக்கும், குழந்தைக்கு ஒரு விபத்து ஏற்படும்.
  • மாமன் புகழ் பெற்றவர், மாமனுக்கு தொழில்  வாய்ப்பு ஏற்படும்.
  • தாத்தா புகழ் பெற்றவர் தொழில் செய்து முன்னேறியவராக இருப்பார்.
  • தாத்தாவுக்கு இருதார யோகம், விருப்ப திருமணம்.
  • ஆக்ரோசமான குலதெய்வம், வேட்டைக்காரதெய்வம்
  • ஆயுதம் உள்ள தெய்வமாக இருக்கும். 
  • பிடிமண் எடுத்தது வைத்து கும்பிடும் குல தெய்வம் இருக்கும்.


கடக லக்னம்
ஆறாம் பாவகப்பலன்கள்

  • கடனால் அவமானம் பிரச்சினை ஏற்படும்.
  • எதிரி இருப்பார், ஆனால்  அவர்களை வெற்றி கொள்வார்.
  • வேலையில் உயர்வு உண்டு. 
  • எந்த இடத்திலும் தலைமைப் பதவி இருக்கும்.
  • முதலாளித்துவத் தன்மை ஏற்படும்.
  • சித்தியினால் பாதிப்பு ஏற்படும்.
  • வாடகை வருமானம் வரும்.
  • குடல் சார்ந்த நோய் மஞ்சள் காமாலை நோய் வரும்.
  • முதுகு எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படும்.
  • விபத்து நடக்கும், நோய் சீக்கிரம் பாதிக்கும்.
  • வாய்வு, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.

கடக லக்ன பலன்கள் தொடரும் .........

Comments