சிம்ம லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள் தொடர்ச்சி....

 


சிம்ம லக்னம் 
ஏழாம் பாவகப்பலன்கள்
  • மணவாழ்க்கையில்  திருப்தி இருக்காது.
  • மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
  • மனைவி இவருக்குப் பயந்து   ஒற்றுமையுடன் இருப்பார்.
  • மனைவி உத்தியோகம் பார்ப்பவராக   இருப்பார்.
  • மனைவி ஒரு உத்தியோகம் இழந்து வேறு உத்தியோகம் பார்ப்பார்.
  • மனைவி இவரை விட படித்தவராக இருப்பார்.
  • கடன், கவலை போக தம் சொத்து மற்றும் சேமிப்பு பணத்தில் பாதியை, 
  • மனைவிக்கு அளித்தால் பரிகாரம் ஆகி பிரச்சனை தீர்ந்து விடும்.

சிம்ம லக்னம் 
எட்டாம் பாவகப்பலன்கள்
  • திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்
  • சிம்ம லக்னத்தார் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.
  • உயில் சொத்து இருக்கும், Lic மூலம் ஆதாயம் கிடைக்கும்
  • தொடர்ந்து  வம்பு வழக்குகள் உண்டாகும்.
  • ஒரு சில தருணங்களில் இவருடைய வாழ்வில் பணம், பொருள்,  உறவு, வேலைக்காரர்௧ள் உட்பட அனைத்தும் விலகி, 
  • தனிமை நிலைக்கு தள்ளப்படுவர்.
  • தம் இறுதி காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்வார்.
  • ஜீவ சமாதி ஆகும் எண்ணம் மனதில் இருக்கும்.
  • ஜீவ சமாதி வழிபாடு செய்வார்கள்.
  • கபம் நெஞ்சை அடைத்து மூச்சு   திணற மரணம் அடைவார்.

சிம்ம லக்னம் 
ஒன்பதாம் பாவகப்பலன்கள்
  • சிறுவயதிலேயே தகப்பனார் ஆதரவு குறைவாகவே   இருக்கும்.
  • இவரின் நடவடிக்கையினால் தந்தை விலகி இருப்பார்.
  • சிம்ம லக்னத்தாரின்  தந்தை ஜோதிடம்   படிப்பார்.
  • தந்தைக்குப் பதவி கிடைக்கும், தந்தை வியாபாரம் செய்வார்.
  • தந்தை  வாக்கால் தொழில் செய்வார்.
  • பிரபலம் அடையும் யோகம் உடையவர்.
  • தந்தைக்கு கடன் ஏற்பட்டு அதனால் ஒரு சொத்தை அழிப்பார், 
  • அல்லது விட்டு கொடுப்பார்.
  • ஜாதகர்க்கும் தந்தைக்கும் ஸ்தல யாத்திரை போகும் யோகம் உண்டாகும்.
  • நெருப்பு வழிபாடு செய்வார், யாகம் வளர்ப்பார்கள்.
  • திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவார்கள்.

சிம்ம லக்னம் 
பத்தாம் பாவகப்பலன்கள்
  • தறிப்பட்டறை, நூல்மில். இரும்புமில், விவசாயம், துணிக்கடை,
  • பால் பண்ணை, பைனான்ஸ், கார் வாடகை, ஆசிரியத் தொழில், பேராசிரியர் போன்ற தொழில்களில் ஏதேனும் ஒன்றை செய்வார்.
  • அரவை மில், எண்ணைமில், அரிசிமில் , தலைமை நீதிபதி, 
  • வக்கீல் போன்றவை ஈடுபாடு இருக்கும்.
  • ஒரு தொழில் இருந்தாலும் கமிஷன் தொழிலும் சேர்த்தே  செய்வார்.

சிம்ம லக்னம் 
பதினொன்றாம் பாவகப்பலன்கள்
  • இவருடைய எண்ணங்கள் நிறைவேறும்.
  • இவர் போடும் திட்டங்கள் மிக சரியாக  இருக்கும்.
  • சித்தப்பா ஆதரவு கிடைக்கும், நண்பர்கள் உதவியும் கிடைக்கும்.
  • மூத்த சகோதரி இவர் குடும்பத்தில் இருப்பார்.
  • பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும்.   
  • சங்கம், டிரஸ்ட் போன்வற்றில் தலைமை ஏற்று நடத்துவார்.
  • எப்போதும் பண சிந்தனை கொண்டவராக இருப்பார்.
  • வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பார்.

சிம்ம லக்னம் 
பன்னிரண்டாம் பாவகப்பலன்கள்
  • வெளிநாடு போகும்  யோகம் ஏற்படும்.
  • குழந்தைகள் வெளி நாடு செல்வார்கள்.
  • அதற்காக இவரும் வெளிநாடு செல்வார்.
  • அப்பாவின் அம்மா பாட்டி மீது அதிக பிரியமாய் இருப்பார்.
  • தாய் வழி தாத்தாவைப் ஜாதகர் பார்க்க மாட்டார்.
  • அப்பாவின் தாய் வழிபாடு செய்து பின்னர் பிறந்தவராக இருப்பார்.
  • குட்டித் தூக்கம் போடுவார், உறங்கும் போது A/C பிரியராக இருப்பார்.

         சிம்ம லக்ன பலன்கள் நிறைவு பெறுகிறது.

Comments