துலாம் லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள்


 

துலாம் லக்னம்
பாவகப்பலன்கள்

  • சற்று உயரம்  குறைவானவர்.
  • பேசுவதற்கு முன்பு சிரித்து விடுவார்.
  • சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.
  • இயற்கையாகவே அழகுடையவர் எனினும் மேலும் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவார்.
  • மீசைக்கு தனிபட்ட  கவனம் செலுத்துவார்.
  • சிலர் மீசையை முழுமையாக எடுத்து விடுவார்கள்.
  • பெண்களாயின் மூக்கு குத்த மாட்டார்கள்.
  • குத்தினால் 2 மூக்கும் குத்தி மூக்குத்தி போடுவார்.
  • இவரை விட வாழ்க்கைத் துணை உயரமாக இருப்பார்.
  • பிறர் பேசும் போது கவனிக்காதது போல் இருப்பார். ஆனால் CID.
  • இவருடைய பேச்சில் உறுதி இருக்கும்.
  • அதிகம் கேள்விகள் கேட்பார்கள்.
  • சுவாதி என்றால் நிதான குணம். ஏதாவது ஒரு கவலை படுவார்
  • நிரந்தரமான இன்பம் அடைய  விரும்புவார். ஆனால் அது பாதியில் நிற்கும்.
  • சந்தோஷம் தூரத்தில் அழைக்கும்
  • இவர் நெருங்குவதற்குள் மறைந்து விடும்.
  • வீண் சந்தேகமும் பயமுமே இதற்கு காரணமாக இருக்கும்.
  • விசாகத்தில் தோன்றியவர் ஜாலியான நபர் ஆவார்
  • ஆனால் பற்றற்றவர் போல் இருப்பார்.
  • முகத்தில் அல்லது உதட்டில் வடு அல்லது மச்சம் இருக்கும்.
  • ரெண்டு பக்கமும் பேசுவார்
  • ஆனால் இறுதி முடிவு இவருடையது தான்.
  • தந்திரம் இல்லாதவர்.

துலாம் லக்னம்
இரண்டாம் பாவகப்பலன்கள்
  • வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்கும்.  
  • லக்னப்புள்ளி சித்திரை என்றால் சந்தோஷமான வாழ்வு இருக்கும்.
  • நடிப்பத்திறமை உடையவர் சிரிப்பு நடிகாராக வர தகுதி உடையவர்கள்
  • சிரித்து பேசுவார் பிறர் சிரிக்கப் பேசுவார்.
  • பிறர் பேச்சை வெட்டி பேச்சு என்பார்.
  • சுயநலம் மிக்கவராக இருப்பார்
  • குற்றம் குறைகளைக் கண்டு பிடிப்பதில் வல்லவர் பிடி எங்கு அகப்படும் என்று சமயம் பார்த்து கொண்டே இருப்பார்.
  • பாடம் நடத்தும் போது அதிகம் குறுக்கிடுபவர்.
  •  அதிகம் கேள்வியும் கேட்பார்.
  • குடும்பத்தில் மூத்தவர் இருந்தாலும் இவரைக் கேட்டுத்தான் முடிவெடுப்பார்கள்.
  • லக்னகாரர் நீதிபதியாயின் வாதாடும் வழக்கறிஞர் திணறுவார்.
  • வழக்கறிஞராய் இருந்தால் நீதிபதி அஞ்சுவார்.
  • வாழ்க்கைத் துணைக்கு அதிகம் பயப்படுவார்.
  • மனைவி குழந்தைகளால் மனக்கவலை ஏற்படும்.
  • மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்படும்  அல்லது இவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு கருவை கலைப்பார்.
  • குழந்தை பிறக்க அல்லது ஆண் குழந்தை  மருந்து மாத்திரை சாப்பிடுவார்.
  • ஆசிரியர் ஜோதிடர் வங்கி பணியாளர் வக்கில் மேஜிஸ்டிரேட் இதில் உள்ளனர்.
  • வரவும் செலவும் சமம் சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
  • வாழ்க்கைத் துணை பணம் அதிக செலவு பண்ணும் எனினும் பணம் கிடைக்கும்.
  • இவருக்கு குரு நல்ல இடங்களில் இருந்தால் வீண் செலவுக்குத்தான் பணம் கிடைக்கும்.
  • பெற்றோர் சகோதரர்  இவற்றைப் பராமரிக்க பணம் கிடைக்காது.
  • இவர் பணம் வட்டி கட்டவும் உயர்ந்த வாடகை கட்டவும் செலவாகும்.
  • நிரந்தர வருவாய் வரும் இறுதி காலத்தில் மிச்சம் பிடித்து ஓய்வும் அமைதியும் அடைவார்.
  • தூரதேச யாத்திரைக்கும் வெளியூர் பயணத்திற்கும் அதிகம் செலவு செய்வார்.
  • பெருமாள் சம்பந்தமாக பயணம் இருக்கும்.
  • பெருமாள் பெயர் உள்ளவரிடம் நல்ல நட்பு கொள்வார்.

துலாம் லக்னம்
மூன்றாம்  பாவகப்பலன்கள்
  • சகோதர உறவு சிறப்பாக இருக்காது.
  • இளைய சகோதரருக்கும் இவருக்கு ஆகாமல் போகும்.
  • இவருடைய உடல் நலக்குறைவிற்கு சகோதர சகோதரிகளே காரணம் ஆவார்கள்
  • அவரே மூத்த சகோதரர் போல செயல்படுவார்.
  • பெரும் முயற்சி செய்து வெற்றி அடைவார்.
  • மாமனாரால் பிரச்சனை ஏற்படும்
  • கௌரவம், புகழ், கீர்த்தி உண்டு
  • தோல்வியிலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்.
  • சீட்டு , வட்டித் தொழில் , MLM  இவர்களுக்கு ஆகாது.

துலாம் லக்னம்
நான்காம் பாவகப்பலன்கள்
  • சுயமுயற்சியால் கல்வி சிறப்பு பெறுவார்கள்..
  • பெரும்பான்மையோர் பட்டதாரிகள்.
  • Engineering, Arts, And science, கலைக் கல்வி, BL படிப்பர்.
  • சட்டக்கல்வி படிப்பது நல்லது
  • இவர் முன்னேற்றத்திற்கு தாய் காரணமாக இருப்பார்.
  • குடும்பம் அமைந்த பிறகு தாய் மீது உள்ள பாசம் குறையும்.
  •  இல்லை என்றால் தாய்க்கு இவர் மீது  பாசம் குறையும்.
  • கல்வி முடியும் போது தாய்க்கு  கண்டம் முடிகிறது.
  • சிறு வயதில் கஷ்டப்படுவார்  பின் வயதில் சுகமாக இருப்பார்.
  • நடு வயது வரை மற்றவற்காக உழைப்பார்.
  • மாடியில் வீடு அமையும்.
  • வீடு வாகனம் பின் வயதில் அமையும்.
  • முதலில் பழைய கார் வாங்கி பின் புதிய கார் வாங்குவார்.
  • கார் வாங்கும் யோகம் பின் வயதில் அமையும்,

துலாம் லக்னம்
ஐந்தாம் பாவகப்பலன்கள்
  • பதவி  தேடி வரும் ஆனால் தாமதமாக கிடைக்கும்.
  • குழந்தைகளிடத்தில் பிரச்சனையிருக்கும்.
  • குலதெய்வம் நீர் சார்ந்திருக்கும்.
  • உள்ளூரில் ஆக்ரோஷமான தெய்வம்.
  • சுடுகாடு அருகில் இருக்கும்.
  • மண் சார்ந்தது வாகனம் உள்ள குலதெய்வமாக இருக்கும்.
  • உயர் கல்வி தடையோடு படிப்பார்.
  • தாத்தாவுக்கு பதவி உண்டு உள்ளூரில் பிரபலமானவர்.
  • தாத்தா, சித்தப்பாவிற்கு இரண்டு தாரம்.
  • வாடகை வருமானம் உள்ள சொத்து 40,  50 வயதுக்குள் அமையும்.

துலாம் லக்னம்
ஆறாம் பாவகப்பலன்கள்
  • உத்தியோகத்தில் இருப்பார்.
  • சீருடைப் பணியாளர் உள்ள குடும்பம்.
  • துலாம் என்றாலே சீருடைப்பணியாளர் குடும்பத்தில் இருப்பார்கள்.
  • வெளியூர் சென்று உத்தியோகம் பார்ப்பார்.
  • உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் இருக்கும்.
  • சிறிய நிலையிலிருந்து உயர் நிலைக்கு வருவார்.
  • கடன் வாங்குவார். 
  • நகைக் கடன் பெறுவார்.
  • சுபகாரியங்களுக்கு கடன் வாங்குவார்
  • குழந்தைகளுக்காக கடன் வாங்குவார்.
  • சகோதரருக்காகவும்  கடன் பட நேரிடும்.
  • மாமானாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
  • வயிறு சார்ந்த நோய், கொழுப்புக் கட்டி, சர்க்கரை, மஞ்சள் காமலை, மூளைத் தொடர்பான நோய்கள் உண்டாகும்.
  • கிழங்கு வகை, கடலைப்பருப்பு எண்ணையில் செய்த பலகாரம்
  • கொழுப்பு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் வயிறு கோளாறு ஏற்படும்.
  • பச்சைமிளகாய் மிகவும் பிடிக்கும்.
  • வழக்கில் வெற்றிக் கிடைக்கும்.
  • வழக்கில் வெற்றிப் பெறாத துலாம் இல்லை .
  • ஆயில் மசாஜ் எண்ணைக்குளியல் விரும்புவர்.
  • வேலையாட்கள் அடிக்கடி மாறுவர்.


கன்னி லக்னம் பலன்கள் தொடரும் .........

Comments