கடக லக்ன ஜாதகருடைய 12 பாவங்களுக்கான பொது பலன்கள் தொடர்ச்சி....

 


கடக லக்னம் 
ஏழாம் பாவகப்பலன்கள்

  • சலிப்பில்லாமல் உழைக்கக்கூடிய வாழ்க்கைத் துணைவி அமைவார்.
  • அவர் மீது தன் அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டே இருப்பார்.
  • மனைவியின் சிரமத்தை சில சமயம் உணர்ந்தாலும், 
  • இது உன் விதி என்று பாராட்டுவார்.
  • மனைவி வந்த பிறகு யோகம், 
  • இவரை விட இவர் மனைவி படித்தவர்.
  • மனைவி வழியில் அதிக ஆதாயம் இருக்காது.
  • மனைவி வந்த 2 ஆண்டுகள் கடும் சோதனை காலமாய் இருக்கும்.
  • மனைவி வழியில் ஒரு துர்மரணம் விபத்து கண்டம் இருக்கும்.
  • சில சமயம் கொஞ்சிப்பேசுவார், 
  • சில நேரம் கடுகடுப்புடன் பேசுவார்.
  • நண்பர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்.
  • நண்பர்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பவர் இவர்கள் தான்
  • கூட்டாளிகளும் நண்பர்களும் இவருடைய ஆலோசனை கேட்டுத்தான்,
  • குடும்ப முடிவுகள் உட்பட எதையும் எடுப்பர்.
  • திருமணம்நடந்து 2 ஆண்டுகளுக்குள் தொழிலையோ வேலையையோ விட்டு விட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கும். 
  • கூட்டாளிகளுக்குத் தொழிலை விட்டுக் கொடுப்பார்.
  • வாடிக்கையாளர்கள்  திரும்ப திரும்ப இவரிடம் வருவார்கள்.

கடக லக்னம் 
எட்டாம் பாவகப்பலன்கள்

  • தூக்கத்திலும் சுய உணர்வுடன் இருப்பார்கள்.
  • தூங்கும் போது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும்.
  • சிறு வயதில் நீர்க்கண்டம் ஏற்படும்.
  • சிறிய விஷயங்களிலும் அதிக கவலை கொள்வார்.   
  • பழைய பொருட்களை சேகரித்து பத்திரப்படுத்துவார்
  • பழைய பொருட்களை விரும்பி வாங்குவார் அதனால் ஆதாயம் இருக்கும்.
  • எவ்வளவு கஷ்ட நஷ்டம் வந்தாலும் பிடித்த பிடியை விடமாட்டார்கள்.
  • திருமணத்தாலும் கூட்டாளிகளாலும் கஷ்டநஷ்டம் ஏற்படும்.
  • மனைவியின் உறவினர்களால் இடை இடையே தொல்லைகள் ஏற்படும்.
  • உடன் பிறந்தவர்களாலும் அவ்வப்போது கஷ்ட நஷ்டம் ஏற்படும்.
  • கடன் வாங்க தயங்கமாட்டார், உயில் சொத்து இவர்களுக்கு பயன்படாது.
  • LIC மூலம் லாபம் கிடைக்கும், மனைவி சிக்கனம் உடையவர்.
  • இரண்டாவது குழந்தைக்கு கண்டம் ஏற்படும். 


கடக லக்னம் 
ஒன்பதாம் பாவகப்பலன்கள்

  • வெளித்தோற்றத்திற்கு பக்தியில்லாதவர் போல் தோன்றினாலும் அந்தரங்க பக்தி உடையவர்.
  • ரகசியமும் மூடு மந்திரமும் இவரிடம் இருக்காது.
  • குருபக்தி முருகன் பக்தி உடையவர்.
  • தன் நலனைக் குறித்தும் பிறர் நலனைக் கருதியும் கையில் கிடைத்ததை தாராளமாக வழங்குவார்.
  • தகப்பனாரால் இவருக்குப் பெரும்பாலும் அதிஷ்டம் சேரும்.
  • தந்தைக்கு அரசு அரசாங்க வருமானம் இருக்கும்.
  • தந்தைக்கு ஒரு தீய பழக்கம் இருக்கும்.
  • தந்தைக்கு கடன் இருக்கும்,  நீண்டநாள் நோய் இருக்கும்
  • தந்தைக்கு வாடகை வருமானம் இருக்கும், 2 வருமானம் வரும்.
  • தந்தை ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர், தீர்த்தயாத்திரை செல்வார்.


கடக லக்னம் 
பத்தாம் பாவகப்பலன்கள்

  • மண்ணெண்ணெய்,  பெட்ரோல், மருத்துவம், கலை , நடிப்பு, உருக்கு அச்சு, எந்திரத் தொழிற்சாலை, ஓட்டல் , அறவை, உணவுப்பொருள் அறவை போலீஸ், ராணுவம், நகை, கவரிங், கொலுசு , ஓவியம் சார்ந்த தொழில். செய்வார்கள்.
  • கார், டாக்ஸி, லாரி வாடகை , Spare Parts விற்றல் முதலிய தொழில்கள் செய்யலாம்.
  • சொத்து, நிலபுலன், காண்டிராக்ட் சார்ந்த தொழில்களும் செய்யலாம்.
  • குறைந்த உழைப்பு அதிக லாபம் இருக்கும்.
  • உட்கார்ந்த இடத்தில் அதிக பணம் சம்பாதிப்பார்.
  • கர்மஜோதிடம்,  மரபணுஜோதிடம் கற்கலாம்.
  • உயர்ந்த பதவியை எளிதில் அடைந்துவிடுவார்.


கடக லக்னம் 
பதினொன்றாம் பாவகப்பலன்கள்

  • மூத்த சகோதர ஆதரவு கிடைக்கும், மூத்த சகோதரர் தொழில் செய்வார்.
  • இவர் விட்டுக் கொடுப்பார்.
  • லாபங்கள் நன்றாக இருக்கும், ஆனால் இவர் அதிக லாபம் எதிர்பார்ப்பார். 
  • அதுவே இவருக்கு பாதகமாகும்.
  • போராட்டத்திற்குப்பின்பு , இவர் ஆசைகள் நிறைவேறும்.
  • பிறபெண் தொடர்பு ஏற்படும்.
  • இசை, பாட்டு, கலை, நடனம்சினமா, டிவி ஆர்வம். இருக்கும். 
  • அதில் தாமதமாய் முன்னேறுவார்.


கடக லக்னம் 
பன்னிரண்டாம் பாவகப்பலன்கள்

  • குட்டித் தூக்கம் போடுவார், இரவில் அதிக நேரம் கண் விழிப்பார்.
  • சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குவார்கள்.
  • கண்பாதிப்பு அடையும், வெளிநாடு சென்று வருவார்கள்.
  • செலவாளியாக இருப்பார்.
  • தாய் வழி தாத்தா ஆதரவும் இருக்கும், அவரால் ஏமாற்றமும் இருக்கும்.
  • நடைப் பயிற்சி குறைவாக இருக்கும்.
  • புதிய ஜோதிடக் கருத்துக்களையும் அல்லது புதிய கலை,
  • இலக்கிய புதுமை புரட்சிக் கருத்துக்களையும் உருவாக்குவார்.

கடக லக்ன பலன்கள் நிறைவு பெறுகிறது.

Comments