மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!

 

அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்! 

வாயுவேகம், மனோவேகம் என்பர். அதாவது காற்று எவ்வாறு ஓரிடத்தில் நிலையாக இராமல் சுற்றிச் சுழன்று வீசுமோ, அவ்வாறே மனிதன் எண்ணங்களும் வேகமாக அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஒன்று தொட்டு ஒன்று என எண்ணங்களின் மீள்நீட்சி சென்றுகொண்டே இருக்கும்.

எண்ணங்கள் என்பது என்ன? ஒருவரின் ஆசைகள், லட்சியங்கள், திட்டங்கள், எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டுச் சிந்தனைகள், சிலசமயம் நல்ல எண்ணம், சிலசமயம் கெட்ட எண்ணம், சிலசமயம் சமூகத்துக்கு ஒவ்வாத எண்ணம், அபிப்ராயம், சிலசமயம் சீரிய யோசனைகள் என ஒரு மனிதன் ஒவ்வொரு நொடியும் யோசித்துக்கொண்டே இருக்கிறான். இது வயதுக்கேற்ற யோசனை, எண்ணங்களாகவும் அமையும்.

நாளடைவில், இவன் ஒன்னு சொன்னாலே விளங்கமாட்டேங்குது' என ஒதுக்கித்தள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

11-ஆமிடம் லாபத்தைக் குறிக்கும். பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை லாபமடைவது என்பதை நோக்கித்தான் பயணப்படும். எனவே இங்கே சிந்தனை பலிப்பதென்பது ஒருவரின் லாபக்கணக்கையும் குறிக்கும்.

இனி, 12 ராசியினருக்கும், அவர்களின் எண்ண மும், லட்சிய பலிதமும், லாபப் பெருக்கமும் எப்படி இருக்குமென்று காண்போம்.

மேஷம்

இவர்கள் ராசியின் எண்ணத்தை நிறைவேற்றும் ராசி கும்பம்; அதிபதி சனி. சனி எப்போதும் மந்தகிரகம்தான். ஆனாலும் அவர் ஒரு ஸ்திர கிரகம். எனவே சனி ஓரையில் வாங்கும் பொருட்களை அவர்களின் வம்சாவளிகளும் அனுபவிப்பர் என்பர். சனி மந்தன் ஆதலால், இவர்களின் நோக்கங்கள் சற்று மெதுவாகத்தான் நிறைவேறும். நிதானமாகத்தான் லாப வரவை அனுபவிப்பார்கள். அதனால் லட்சியங்கள் சற்றே மெத்தனமாக நிறைவேறுவதால், லாப முன்னேற்றமும் கொஞ்சம் தாமதமாகவே அமையும். எனினும் தீர்க்கமாக இருக்கும். முயல், ஆமை கதைபோல், நிதானமாகச் சென்றாலும் எண்ணம் நிறைவேறிவிடும். அதனால்தான் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நிறைகுடமாக திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற்றுவிடுவார்கள். அரசு தொடர்பாக உச்சமான பதவிகளே இவர்களின் லட்சியமாக இருக்கும்.

11-ஆம் அதிபதி 7-ஆமிடத்தில் உச்சமாவார். எனவே இவர்களின் எண்ணங்கள், லட்சியங்களை நிறைவேற்ற ஒரு தொண்டர் படையே காத்துக்கொண்டிருக்கும். மனிதர்களின் தொடர்பால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். சிலசமயம் அதர்மவழியிலும் லட்சியம் நிறைவேறும்.

இவர்களின் 11-ஆம் அதிபதி நீசம் பெற்றால், அந்தோ பரிதாபம். ஏனெனில் ராசியிலேயே நீசம்பெறுவார். வாழ்க்கைத் தோல்விகளுக்கும், எண்ணங்களின் சறுக்கலுக்கும் இவர்களே காரணமாகிவிடுவார்கள். என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேறாமல் போய்விடும். அதிர்ஷ்டம், லாபம் என்பது இவர்கள் இருக்கும் ஏரியாவுக்குள் கூட வராது.

ஜோதிடத்தில் ஒருவரின் எண்ணங்களைப் பற்றிக்கூறும் இடம் 5-ஆமிடமாகும். 5-ஆமிடம், அதன் அதிபதி, 5-ஆமிடத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம் என இதனைப் பொருத்து சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

சரி; இத்தனை யோசனைகள், சிந்தனைகள், லட்சியங்கள், விருப்பங்கள், தாபங்கள் அனைத்தும் நிறைவேறுமா? எண்ணியது எண்ணியாங்கே பலிதமாகுமா? இதனை நிர்ணயித்துக்கூறுமிடம் 5-ஆமிடத்துக்கு 7-ஆமிடமான 11-ஆமிடம். ஆக ஒரு மனிதன் அனைத்துக்கும் ஆசைப்படலாம். ஆனால் அது நிறைவேறுமா, காலதாமதமாகுமா? ஆசைக்கு எதிரான செயல்கள் நடக்குமா? ஆசையே நிறைவேறாதா என இத்தனை விஷயங்களையும் 11-ஆமிடம் தெளிவாகக் கூறும். அதுவும் நமது எண்ணங்கள் தர்மவழியில் நிறைவேறுமா? அதர்மவழியில் நிறைவேறுமா என்பதையும் 11-ஆமிடம் அறுதியிட்டுக் கூறிவிடும். 

11-ஆமிட அதிபதியும் ஆசைகள் நிறைவேறும் விதமும்

11-ஆமிட அதிபதி உச்சமானால், நமது லட்சியங்கள் பூத் தொடுப்பதுபோல் எளிதாக, விரைவாக நிறைவேறும். -

11-ஆமிட அதிபதி ஆட்சியானால் நமது ஆசைகள், அளவிடா முறையில் அழகாக நிறைவேறும்.

11-ஆம் அதிபதி சுப வர்க்கோத்தமம் பெற்றால் சுலபமாக எண்ணம் நிறைவேறும்.

11-ஆம் அதிபதி நீசம்பெற்றால் நினைவுகள் நிறைவேறுவது கடினம். 11-ஆம் அதிபதி பகை, நீசம் பெற்று, 6, 8, 12-ல் இருப்பின் எந்த முயற்சியிலும் லாபம் இல்லை .

லக்னாதிபதியும், 11-ஆம் அதிபதியும் பகை கிரகங்களாக அமையும்போது பகைவர்களுடன் முட்டி மோதி, யோசனைகளை நிறைவேற்றுவார்கள்.

11-ஆம் அதிபதி நீச வர்க்கோத்தமம் பெற்றால் சிந்திக்காமலிருப்பது உத்தமம். என்ன யோசனை என்றாலும் எதுவும் நிறைவேறாது

நாளடைவில் தன்னைத்தானே நொந்துகொண்டு, சுய கழிவிரக்கம் கொள்வார்கள்.

இவ்வாறு 11-ஆம் அதிபதி சனி நீசமான அன்பர்கள் ஓடிப்போய் ஆஞ்சனேயரின் பாதங்களை இறுகப்பற்றுங்கள். இன்னுமொரு பலமான பரிகாரம்- கோவில்களையும், குளங்களையும், அருகிலுள்ள ஏரிகளையும் முடிந்த அளவு சுத்தப்படுத்துங்கள். நீர்நிலைகளின் அசுத்தம் குறையும்போது, உங்களின் துரதிர்ஷ்ட மும் குறைய ஆரம்பிக்கும். ஐயப்பனை வணங்கவும்.

ஆர்.. மகாலட்சுமி


Comments

  1. Horoscope 2025 - In the year 2025, horoscope points to dynamic shifts for all zodiac signs. Jupiter’s expansive energy fuels growth in career and personal life, while Saturn’s discipline brings needed stability for all signs. Major planetary transits encourage self-reflection, adaptability, and transformation. The year 2025 is ideal for setting new goals and embracing positive change with confidence. Visit: Horoscope 2026

    Horoscope 2027

    12horoscopesigns.com

    ReplyDelete

Post a Comment