அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!
கடகம்
கடக ராசியின் சிந்தனாதிபதி செவ்வாய். ராசி விருச்சிகம். இவர்களின் யோசனைகள் எல்லாம் மூடுமந்திரமாகவே இருக்கும். படுரகசியமாக சிந்திப்பார்கள். இவர்களின் எண்ணங்களை யாராலும் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ முடியாது. எல்லா லட்சியங்களும் இவர்களின் தொழில் மேன்மை, கௌரவம் சார்ந்தே இருக்கும்.... ' எவனை வச்சு எப்படி செய்யலாம்' என்றே புத்தி ஓட்டம் இருக்கும்.
இந்த அரிய சிந்தனைகளை
நிறைவேற்றும் இடம் ரிஷபம். அதிபதி சுக்கிரன். இதேவீட்டில் இவர்களின்
ராசியாதிபதி சந்திரன் உச்சமடைவார். இவர்களுக்கு ஆயிரம் மட்டமான
யோசனைகள் இருந்தாலும், அதனை மிக அழகாக நிறைவேற்றிவிடுவார்கள்.
11-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பின், இவ்விதம்
இவர்களின் லட்சியங்கள்- அது நல்லதாக இருக்கட்டும், வேறுவிதமாக இருக்கட்டும்- அலுங்காமல், குலுங்காமல் இருந்த இடத்தில் இருந்தே அம்சமாக நிறைவேற்றிவிடுவார்கள்.
இதே 11-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் உச்சமடைந்தால், ஆஹா! சூப்பர். அதிர்ஷ்டத்துடன்
எண்ணங்கள் நிறைவேறும். நினைத்தாலே இனிக்கும்' என்பதுபோல நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
இவர்களின் லட்சியத்தை
நிறைவேற்றும் தகுதியுள்ள சுக்கிரன் நீசமடைந்தால், முதலில் இவர்களுக்கு அதிக
சிந்தனையே வராது. லட்சியம் எல்லாம் ஒன்றும் கிடையாது.
'குறிக்கோளா? அப்படின்னா என்ன?' என்பது மாதிரி இருப்பார்கள். இது ஒருவகையில் நல்லதுதான்.
லட்சியம் இருந்தால்தானே நிறைவேறுகிறதா என்று மனம் அலைபாயும்.
ஒரு யோசனையும் இல்லையென்றால் பழுதே இல்லை பாருங்கள். அசந்து மறந்து ஒன்றிரண்டு ஆசைப்பட்டாலும், அதுவும் நிறைவேறாது....
நாளடைவில் விரக்தியில், ஒரு சந்நியாசி மாதிரி ஆகிவிடுவார்கள்.
இவர்கள் ஆசையெல்லாம்
தொழில், வீடு மற்றும் கௌரவம் சார்ந்ததாகவே அமையும். எனவே கடக
ராசியில் சுக்கிரன் நீசமானவர்கள் பழமையான மகாலட்சுமி கோவில்களில் வழிபாடு நடத்துங்கள்.
பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுங்கள்.
சுக்கிரன் நீசமாகி, எண்ணம் நிறைவேறத் தடையுள்ள கடக ராசியினர், சிறு குழந்தைகளுக்கு
இலவச ட்யூஷன் எடுங்கள். இன்றும்கூட அரசு சம்பந்தமான படிவங்களை
நிரப்புவதற்குத் தெரியாமல் நிறைய மக்கள் தவிக்கிறார்கள். ஓய்வு
நேரத்தில், இப்படிப்பட்ட மக்களுக்கு தகவல் தொடர்பில் உதவுங்கள்.
உங்கள் எண்ணம் பலிதமாகும்
அதிபதி கடக ராசியின் 3-ஆமிடத்தில் நீசமடைவார். 3-ஆமிடம்
என்பது தகவல் தொடர்பைக் குறிப்பது. எனவே தகவல் தொடர்பில் மற்றவர்களுக்கு
உதவும்போது எண்ணம், லட்சியம் எல்லாம் நாளடைவில் கொஞ்சமாவது ஈடேறும்.
உங்கள் இளைய சகோதரி வயதுடையவர்களுக்கும், வாழ்க்கைத்துணையைப்
பிரிந்த பெண்களுக்கும் இயன்ற உதவியை (உதவி மட்டும்) செய்யவும்.
வணக்கம் குருவே எனக்கு சுக்கிரன்மகரலக்னத்தில் உள்ளார் பரிகாரம்மாறுபடுமா குருவே பணிவுடன் தங்களுடைய பதிலுக்காக
ReplyDelete