அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!
ரிஷபம்
ரிஷப ராசிக்கு எண்ணங்கள், லட்சியங்கள் உருவாகும் இடம் கன்னி ராசி. இதன் அதிபதி
புதன். புதன் எப்போதும் சிந்தனைக்குரிய கிரகம்தான். அவரே 5-ஆம் அதிபதியாக வரும்போது, யோசனைக்குக் குறைவே இருக்காது. குடும்பம், செல்வம், வாக்கு, புத்திசாலித்தனமான
வியாபாரம் இவை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அத்தனை சிந்தனையும்
சிறகடித்து நிறைவேறும். 11-ஆமிடம் மீனம். அதன் அதிபதி குரு
புதன் ஒரு சிந்தனை கிரகம். அவை நிறைவேறும் இடம் ஒழுக்கத்துக்குரிய
குரு பாடு. எனவே கூடுமானவரை ரிஷப ராசியினர் தங்கள் ஆசைகளை ஒரு
நேர்க்கோட்டில், சட்டத்துக்குட்பட்டு, ஒழுக்கமாக
நிறைவேற்றுவர்.
ரிஷப ராசியின் 11-ஆம் அதிபதி குரு உச்சமானால் லட்சியங்களை நன்கு திட்டம்தீட்டி நிறைவேற்றுவார்கள்.
இதில் இன்னொரு விஷயம்- குரு ரிஷப ராசியினரின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி மட்டுமல்ல;
8-ஆமிட அதிபதியும் ஆவார். இதனால் இவர்களின் லட்சியங்களை
நிறைவேற்றும்போது, சட்டத்தின் ஓட்டை உடைசலைக் கண்டுபிடித்து,
அதன் வழியாகவெல்லாம் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். கேட்டால் 'சட்டப்படிதான் நடக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சமும் அஞ்சாமல் சொல்வார்கள். குருவே 8-ஆம் அதிபதியாகி, அவரே
11-ன் அதிபதியும் ஆகும்போது, தப்புத்தண்டாக்களை
ஆல்டர் செய்து அதனை நியாயப்படுத்தியும் விடுவார்கள். தங்கள் லட்சியம்
நிறைவேற இளைய சகோதரர்கள், வேலையாட்கள் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
11-ஆம் அதிபதி 11-ல் ஆட்சியாக இருப்பினும் எண்ணம் நிறைவேற
ஒரு தடையுமில்லை .
இதே குரு 8-ல் ஆட்சி பெற்றால் கதை சற்று கந்தல்தான். ஒன்று,
ஆசைகள் நிறைவேற பெரிய பெரிய தடைகள், எதிர்ப்புகள்
வரும். அல்லது லட்சியங்களை முறையற்றவழியில் நிறைவேற்றிக் கொள்வார்கள்.
அதில் நிறைய சட்டத்திற்கு விரோதமான விஷயங்கள் இருக்கும். அதனைப் பூசி மெழுகிவிடுவார்கள்.
11-ஆம் அதிபதி குரு நீசமானால், என்ன சொல்ல? 11-ஆமிடம் லாப ஸ்தானம். 9-ஆமிடம் அதிர்ஷ்ட த்துக்குரிய இடம்.
இவ்வாறு ஒரு லாபாதிபதி ஒரு அதிர்ஷ்ட இடத்தில் நீசமாகி மறைந்தால் லட்சியம்
நிறைவேறாததால் அதிர்ஷ்டம் இல்லையா? அதிர்ஷ்டம் இல்லாததால் எண்ணம்
நிறைவேறவில்லையா என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
இந்த நிலையில் ரிஷபத்தாருக்கு
எண்ண அதிபதி- 5-ஆம் அதிபதி புதன் 11-ல் நீசம். இந்நிலை இருந்தால் சொல்ல என்ன இருக்கிறது? உருப்படாத
யோசனைகள்தான வரும் என்று சொல்லலாமா அல்லது விளங்காத விஷயத்தைத்தான் யோசிப்பார் என்று
சொல்லலாமா? ஏதோ ஒன்று .
இவர்களின் எண்ணத்தை
நிறைவேற்றும் அதிபதி குரு நீசமானால், சிவனின் பாதக்கமலம் பணியுங்கள். சிவனின் எந்த மந்திரம் சொல்ல முடியுமோ, அதனை தினந்தோறும்
பாராயணம் செய்யுங்கள். 'ஓம் நமசிவாய' என்று
முடிந்த மட்டும் சொல்லுங்கள். இயன்றபோதெல்லாம் திருவண்ணாமலை சென்று
கிரிவலம் வாருங்கள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் எண்ணியது எண்ணியாங்கே
நடக்கும். வசதி குறைந்த அந்தணர்களுக்கு, ஏழ்மை நிலையிலுள்ள சிறுவர்களுக்கு, கர்ப்பச்சிதைவடைந்த
பெண்களுக்கு, கல்வி தடைப்பட்டவர்களுக்கு உணவு, ஆடை, மருந்துகள், புத்தகம் வாங்கிக்கொடுங்கள்.
இருளான கோவில்களில் எத்தனை விளக்கு ஏற்றுகிறீர்களோ, அத்தனை அளவு எண்ணம் ஈடேறும்.
ஆர்.. மகாலட்சுமி
Comments
Post a Comment