அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!
சிம்மம்
சிம்ம ராசியின் சிந்தனாதிபதி
குரு. ராசி தனுசு. தர்ம சிந்தனைகளையும் சற்றே கோக்குமாக்காக
சிந்திப்பவர்கள் இந்த ராசியினர். யோசனைக்குரிய குரு
8-ஆம் அதிபதியாகவும் வருவதால் ஏற்படும் விளைவு இது.
இவர்களின் லட்சியங்களை
நிறைவேற்றும் இடம் மிதுனம். அதிபதி புதன். புதன் எப்போதும் வேக
சிந்தனைக்குரியவர். எனவே ஒன்று யோசித்தால், உடனே உடனே அது நிறைவேறவேண்டும் என பரபரப்பவர்கள். எள்
என்று நினைத்தவுடனே அது எண்ணெய்யாக வேண்டும் என்ற அதிவேக லட்சிய நிறைவேறும் குணம் உடையவர்கள்.
இதனால்தானோ என்னவோ சிம்ம ராசியினரை எப்போதும் அவசரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி
விடுவார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற தங்கள் குடும்பத்தாரையும்,
பணத்தையும், சிலசமயம் மிரட்டும் பேச்சுகளையும்
பயன்படுத்துவர். சிம்ம ராசியினரின் லட்சியம், எண்ணத்தை நிறைவேற்றும் அதிபதி புதன். அவர் ஆட்சியானாலும்
உச்சமானாலும் குறிக்கோள் நிறைவேறும்போது, நல்ல பணம் சம்பாதித்துவிடுவார்கள்.
-
இதே புதன் 8-ஆம் வீட்டில் நீசமடைவார். இவர்கள் என்ன யோசித்தாலும்,
அதற்கு எதிர்மறையாக நடந்துவிடும். சிலசமயம் இவர்களின்
யோசனைகள் சிறைச்சாலைக்கும் அனுப்பிவிடும். எனவே புதன் நீசமான
சிம்ம ராசியினர் ஆயிரம் யோசனை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து
அது நிறைவேற எந்த நடவடிக்கையும் எடுத்துவிடாதீர்கள். சிலசமயம்
தீராத அவமானத்தையும் கொடுத்துவிடும்.
இவ்வாறு புதன் நீசமான
சிம்மத்தார் சயனப் பெருமாளை வணங்கவும். கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி தொடர உதவவும்.
ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்யவும். பெருமாளுக்கு
Comments
Post a Comment