மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!

அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!

 மிதுனம்

மிதுன ராசியின் சிந்தனை ராசி துலாம். அதிபதி சுக்கிரன். கேட்கவே வேண்டாம். யோசனைகள் கூட அழகாகத்தான் தோன்றும். எல்லாரையும்விட ஒருபடி அதிக யோசனைகள் வரும். வெளிநாடு செல்ல, நிறைய முதலீடு செய்ய, நிறைய செலவு செய்ய என லட்சியம் வரும்.

இவர்களின் அத்தனை அவாக்களையும், டாம்பீகமான ஐடியாக்களையும் நிறைவேற்றும் இடம் மேஷம். அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் 11-ல் ஆட்சியாக இருந்தால் நினைத்தது நிறைவேறும். அவரின் இன்னொரு வீடான 6-ல் ஆட்சி பெற்றாலும் எண்ணம் நிறைவேற கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கடன், கொஞ்சம் வம்பு வழக்கு என எல்லாம் கலந்துகட்டி, எதையாவது செய்து நினைத்ததை முடித்துவிடுவார்கள்.

செவ்வாய் உச்சமானால் என்ன நல்ல பலன்? மிதுனத்தார் நினைத்ததற்குமேல் பலமடங்கு நடக்குமல்லவா என்றால், அல்ல! அவர் மிதுனத்தில் 8-ஆமிடத்தில் அல்லவா உச்சமாவார். ஒரு அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தால் அழகு. அதே அரசன் பதுங்கு குழியில் போய் உட்கார்ந்தால் என்ன சொல்வது. g=RIL -

அதே கதைதான். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி 8-ல் மறைவது, உச்சமாவது- இவர்களின் உயரிய சிந்தனைகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனாலும் கிரகம் செவ்வாய் ஆதலால் ஏதேனும் மறைவு, சட்டப்புறம்பான வழிகள்மூலம் எண்ணங்களை நிறைவேறச் செய்துவிடுவார். செவ்வாய் உச்சமானால், எண்ணங்கள் நேர்வழியில் நிறைவேற வாய்ப்புக் குறைவு.

இதே 11-ஆம் அதிபதி செவ்வாய் 2-ஆமிடத்தில் நீசமடைவார். எனவே இவர்கள் என்ன யோசித்தாலும் இவர்களின் வார்த்தைகளே நிறைவேறவிடாமல் செய்துவிடும். தங்கள் அழகான லட்சியங்களைப் பேசிப்பேசியே கெடுத்துவிடுவார்கள். இவர்கள் குடும்பத்தார் நாளடைவில், 'நீ பேசாமல் இரு; அதுபோதும். பேசினாலே நடக்கிறதுகூட நடக்காமல் போகிறது' என கரித்துக்கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதனை நீசச்செவ்வாய் சரியாகச் செய்வார்.

இவர்களின் எண்ணங்கள், லட்சியங்கள் ஓரளவாவது நிறைவேறுவதற்கு, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடவேண்டும்.

மிதுனத்தாரின் செவ்வாய் நீசமானால், வாய்பேச முடியாத குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, தங்களால் முடிந்த உணவுப்பொருட்கள், சமையல் பொருட்கள் வாங்கிக்கொடுங்கள். இளம்வயதுப் பையனுக்கு சிவப்பு நிற உடை வாங்கிக்கொடுங்கள். மிதுனத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் செவ்வாய் நீசமானாலும்கூட, இந்தப் பரிகாரங்கள் ஓரளவுக்காவது லட்சியங்கள் நிறைவேற துணைசெய்யும்.

மிதுனத்தாருக்கு செவ்வாய் நீசமடைந்தால், வேலை விஷயமாக எப்போதும் எண்ணங்கள் தடைப்படும். இவ்விதம் உள்ளவர்கள், திருச்சி அருகே உள்ள திருத்தலையூர் அல்லது பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி ஆகிய ஊர்களிலுள்ள கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குங்கள்.

திருத்தலையூர்: ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீசப்தரிஷ்ஸ்வரப் பெருமான். கல்பாத்தி: லட்சுமி நாராயணப் பெருமாள்.

ஆர்.. மகாலட்சுமி

Comments

  1. Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Tamil astrologer online consultation / Astrology consultation in Chennai.

    Best astrologer in Chennai online

    ReplyDelete

Post a Comment