அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!
கன்னி
கன்னி ராசியினரின்
சிந்தனாதிபதி சனி. ராசி மகரம். சனி என்றாலே சற்று ஸ்லோதான்.
எனவே இவர்கள் யோசனை செய்வதற்கே அதிக நாள் எடுத்துக் கொள்வர்.
சிந்திப்பதற்கே அதிகம் தயங்குவர். லட்சிய வேட்கை
என்றெல்லாம் இருக்காது. 'லட்சியமா? இருக்கு
இருக்கு... யோசனை செய்கிறேன்' என்பர்.
பிரச்சினை வந்துவிடுமோ என தங்களுக்குள்ளேயே அஞ்சுவர். மற்றவர்களோ 'இவன் என்னைக்கு யோசிச்சு என்னைக்கு செயல்படுத்துவது?'
என நொந்து போய்விடுவர்.
இவ்வளவு மெதுவாக
யோசிப்பார்களே தவிர, இதனை நிறைவேற்றும் அதிபதியோ 'ஃபாஸ்ட்
ஃபாஸ்ட்' சந்திரன். எனவே ஒன்று முடிக்கவேண்டுமென்று
முடிவெடுத்துவிட்டால், இவர்கள் பேச்சை இவர்களே கேட்கமாட்டார்கள்.
அவ்வளவு விரைவாக செய்துமுடித்து விடுவார்கள். என்ன
ஒன்று... யோசிக்கத்தான் வருடக் கணக்காகும்.
இதே சந்திரன் கன்னி
ராசிக்கு உச்சமானால், இவர்கள் எண்ணியது பல மடங்கு விருத்தியுடன் நிறைவேறும்.
எல்லாரும் பொறாமைப்படும் அளவுக்கு, அதிர்ஷ்டத்துடன்
எண்ணியது ஈடேறும்... சந்திரன் கன்னி ராசிக்கு ஆட்சியாக இருந்தாலும்
லட்சியம் நிறைவாக நிறைவேறும். பெரும்பாலும் இவர்கள் யோசனைகளை
நிறைவேற்ற பெண்களே பெரும் உதவி செய்வர்.
இதே சந்திரன் நீசமானால், சீரான சிந்தனைகள் இராது. அல்லது இவர்கள் நினைத்தது இவர்களின்
தவறான யோசனையால் நிறைவேறாமல் போய்விடும். அல்லது இவர்களின் இளைய
சகோதரம் லட்சியத்தைத் தடை செய்வார். சிலசமயம் 'கம்யூனிகேஷன் கேப்' எனும் தகவல் தொடர்பில் தவறு ஏற்பட்டும்
யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, நிறைவேறாது.
கன்னி ராசியினரின்
சிந்தனைகள் பெரும்பாலும் வேலையைப் பற்றி தான் இருக்கும். வேலையைப் பற்றிய கற்பனைகள் தடைப்படும்போது, வாழ்வில்
ஒருவிதப் பற்றின்மை வந்துவிடும். சிலர் நோய்களைப்பற்றி சதா சிந்தனை
செய்வர்.
எனவே கன்னி ராசியினருக்கு
சந்திரன் நீசமாகி இருந்தால், கண்டிப்பாக அம்பாளை வணங்க வேண்டும். தண்ணீர் சம்பந்தமான உதவிகள் செய்யவேண்டும். கன்னி ராசியினர்
யாரெல்லாம் லட்சியம் தடைப்பட்டு இலக்கில்லாமல் நிற்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கண்டிப்பாக நீர் சார்ந்த குழாய்கள், ஏரிகள், வாய்க்கால், ஆறு போன்றவற்றில்
ஏதேனும் சீரமைக்க பெரும் முயற்சி எடுங்கள். குறைந்தபட்சம் உங்கள்
வீட்டுக்குப் பக்கத்திலுள்ள குழாயை சரி செய்யலாம். அல்லது அருகிலுள்ள
ஓடையில் குப்பைகளை அகற்றலாம். இதுபோன்று பரிகாரம் செய்யும்போது,
உங்கள் வேலை பற்றிய எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும். அதற்கும் மேலாக சீரான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
எந்தவொரு ஜாதகத்திலும்
சந்திரன் கெடக்கூடாது. பரிகாரம் செய்யாவிட்டால் நாளடைவில் 'அந்தாளு கொஞ்சம் லூசு' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.
திங்களூர், சோட்டாணிக்கரை பகவதி போன்ற கோவில்களுக்குச் சென்று வணங்கவும்.
ஆர்.. மகாலட்சுமி
Well, thanks.
ReplyDelete